search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அசாம் வெள்ளம்"

    • யானை குட்டி ஆற்றின் நடுவே வெள்ளத்தில் தத்தளிப்பதை பார்த்த ஒருவர் பாலத்தின் மேல் இருந்து கீழே பெரிய கயிற்றுடன் இறங்குகிறார்.
    • வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் யானை குட்டியை மீட்ட பொதுமக்களை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

    அசாமில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி மனிதர்கள் மட்டுமல்லாது விலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட ஒரு ஆற்றின் நடுவே யானை குட்டி ஒன்று சிக்கியதும், அதனை வாலிபர் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து கயிறு கட்டி மீட்ட காட்சிகள் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

    அங்குள்ள ஒரு ஆற்றை 6 வார வயது கொண்ட குட்டி யானை ஒன்று கடக்க முயன்ற போது ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றை ஒட்டிய பாலத்தை கடக்க யானை குட்டி முயன்ற நிலையில் வெள்ளத்தில் சிக்கி உள்ளது. இதனால் யானை குட்டி ஆற்றின் நடுவே வெள்ளத்தில் தத்தளிப்பதை பார்த்த ஒருவர் பாலத்தின் மேல் இருந்து கீழே பெரிய கயிற்றுடன் இறங்குகிறார்.

    பின்னர் வெள்ளத்தில் மெதுவாக நடந்து சென்று யானை குட்டியை நெருங்கிய அவர், அதன் இடுப்பில் கயிற்றை சுற்றிக்கட்ட முயற்சிக்கிறார். முதலில் யானை குட்டி அங்கும், இங்குமாக சென்ற நிலையில், அந்த வாலிபர் போராடி யானையின் இடுப்பு முழுவதும் கயிற்றை கட்டுகிறார். பின்னர் பாலத்தின் மேல் இருந்து பொதுமக்கள் அந்த கயிற்றை மேலே இழுக்க யானை குட்டி பத்திரமாக மீட்கப்படுகிறது.

    இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் யானை குட்டியை மீட்ட பொதுமக்களை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

    • மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • 13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    அசாமில் பெய்து வரும் கனமழைக்கு பல மாவட்டங்களில் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோபிலி, பாராக், குஷியாரா உள்ளிட்ட பல முக்கிய ஆறுகளில் அபாய அளவைத் தாண்டியுள்ளது.

    மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, அசாமின் திப்ருகர் நகரின் பல பகுதிகளில் பெய்த கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே, 13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளதால் வெள்ள பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

    • கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் கரீம்கஞ்சில் வசிக்கும் 2.5 லட்சம் பேர் பாதிப்புக்குள்ளாயினா்.
    • பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக 100-க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    கவுகாத்தி:

    அசாமில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளத்தில் சிக்கி 4 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அந்த மாநிலத்தில் உள்ள கோபிலி, பராக், குஷியாரா ஆகிய முக்கிய நதிகளில் நீரோட்டத்தின் அளவு அபாய கட்டத்தை தாண்டி பாய்கின்றன. அசாம் மாநிலத்தில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, பஜாலி, பக்சா, கரீம்கஞ்ச் உள்ளிட்ட 19 மாவட்டங்களை வெள்ள நீா் சூழ்ந்துள்ளது. அதில் சிக்கி 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

    அந்த மாவட்டங்களில் உள்ள சாலைகள், பாலங்கள் உள்ளிட்டவை பெருமளவில் சேதமடைந்துள்ளன. இதனால் அங்கு அத்தியாவசிய சேவைகள் முற்றிலுமாக முடங்கியுள்ளன. மேலும், அங்கு அடுத்த சில நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் கரீம்கஞ்சில் வசிக்கும் 2.5 லட்சம் பேர் பாதிப்புக்குள்ளாயினா். இந்த ஆண்டு கனமழை, வெள்ளம், இடி மின்னல் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 36-ஆக உயா்ந்துள்ளதாக அந்த மாநில அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக 100-க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், 14,000-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கி உள்ளனா்.

    • 10 மாவட்டங்கள் கனமழைக்கு பாதிப்பு
    • பல இடங்களில் சாலைகள் அடித்துச் செல்லப்பட்டன. பாலங்கள் இடிந்து சேதம்

    அசாமில் கனமழை பெய்து வருகிறது. நேற்றில் இருந்து இன்று வரை ரெட் அலார்ட், அதனைத்தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு ஆரஞ்ச் அலார்ட், அதன்பின் வியாழக்கிழமை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதனால் மழை கொட்டித்தீர்த்து வருகிறது. கனமழை காரணமாக சிராங், தராங், தெமாஜி, துப்ரி, திப்ருகார், கோக்ராஜ்ஹார், லகிம்புர், சோனிட்புர், உதால்கிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    லகிம்புர் மாவட்டம்தான் மழையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு 22 ஆயிரம் பாதிக்கப்பட்டுள்னர். திப்ருகார் மாவட்டத்தில் 3800 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    அதிகாரிகள் 25 இடங்களில் நிவாரம் வழங்கும் மையத்தை தொடங்கியுள்ளனர். ஆனால், தற்போது வரை நிவாரண முகாம் திறக்கப்படவில்லை.

    கம்புரில் பிரம்மபுத்திராவின் கிளை நதியான கோபிலி அணையில் தண்ணீர் அபாய கட்டத்தை தாண்டி செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. சாலைகள், பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

    • நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்கவும் மாவட்ட அதிகாரிகளை சுகாதாரத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.
    • நிலைமையை சமாளிக்க வரும் 16ம் தேதிக்குள் மாவட்ட விரைவுப் பதில் குழுவை அமைக்குமாறு வலியுறுத்தல்.

    அசாம் மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் மற்றும் மலேரியா பரவி பலரது உயிரை எடுக்கிறது. குறிப்பாக, மழைக்கால வெள்ளப் பருவத்தில் வேகமாக பரவும் இந்த காய்ச்சல் மே மாதத்தில் தொடங்கி அக்டோர் மாதம் வரையில் நீடிக்கிறது.

    ஏற்கனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாமில் கடந்த 9 நாட்களில் மட்டும் ஜப்பானிய மூளைக்காய்ச்சலால் 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 82 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய சுகாதார இயக்கம் தெரிவித்துள்ளது .

    இந்நிலையில், மாவட்ட விரைவுப் பதில் குழுக்களை அமைக்கவும், நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்கவும் மாவட்ட அதிகாரிகளை சுகாதாரத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

    இதுகுறித்து அசாம் மாநில சுகாதாரத் துறையின் முதன்மைச் செயலர் அவினாஷ் ஜோஷி மறஅறும் தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குனர் டாக்டர் எம்.எஸ்.லட்சுமி பிரியா ஆகியோர் நேற்று மாவட்ட அதிகாரிகளுடன் காணொலி மூலம் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அதில், நிலைமையை சமாளிக்க வரும் 16ம் தேதிக்குள் மாவட்ட விரைவுப் பதில் குழுவை அமைக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

    • பிரம்மபுத்திரா மற்றும் பராக் ஆறுகள் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து 32 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின.
    • அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல்.

    அசாமில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    பிரம்மபுத்திரா மற்றும் பராக் ஆறுகள் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து 32 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதில் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 55 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:-

    அசாமில் வரலாறு காணாத வெள்ளத்தை எதிர்கொள்ளும் எங்கள் சகோதர சகோதரிகளுடன் என் எண்ணங்கள் உள்ளன. உயிரிழந்தவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு இதயப்பூர்வமான இரங்கல்கள்.

    காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் மீட்பு மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து உதவிகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய, மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
    • வெள்ளம் சூழ்ந்த பகுதியில் இருந்து மீட்கப்பட்ட 1.56 லட்சம் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    கவுகாத்தி:

    அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக அம்மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    மழை வெள்ளத்தால் 32 மாவட்டங்களில் மொத்தம் 30 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அதேவேளை பல பகுதிகளில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 62 பேர் உயிரிழந்துள்ளனர் என மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும், வெள்ள பாதிப்புகள் குறித்து மாநில முதல் மந்திரியிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

    அசாமில் பெய்து வரும் பலத்த மழையால் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி 4 லட்சம் பேர் பாதிப்பு அடைந்துள்ளனர் என மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். #AssamFlood
    கவுகாத்தி:

    அசாம் மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருவதால் பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    ஹோஜய், கிழக்கு கர்பி அங்லாங், மேற்கு கர்பி அங்லாங், கோலாகோட், கரிம்கஞ்ச், ஹைலகண்டி மற்றும் கச்சார் மாவட்டங்களில் உள்ள சுமார் 3.87 லட்சம் மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். சுமார் 668 கிராமங்களில் உள்ள ஆயிரத்து 912 ஹெக்டேர் விளைநிலங்கள் மழையில் மூழ்கி சேதமடைந்துள்ளன. பல்வேறு நகரங்களில் சாலைகள் சேதமடைந்துள்ளன.



    கவுகாத்தி நகரின் சில பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளத்தில் சிக்கி தவித்தவர்களை பத்திரமாக மீட்டு 178 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் பேரிடர் மீட்புக் குழுவினர் செய்து வருகின்றனர்.

    கடந்த 24 மணி நேரத்தில் 500க்கு மேற்பட்டோர் வெள்ளத்தில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். #AssamFlood
    ×